• Nov 28 2025

கும்கி - 2 படத்தின் அறிவிப்பு வெளியானது.! முதல் வாழ்த்துக்களை பகிர்ந்த சிம்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு  இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில்,  நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த திரைப்படம் தான் கும்கி. இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. 

இதில்  தம்பி ராமையாவின் நகைச்சுவை,  டி. இமானின் இசையில் வெளியான பாடல்கள் அத்தனையும்   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.  இந்த படத்தின் கதைக்களமும்  பலரை கண் கலங்க செய்திருந்தது. 

இந்த நிலையில், கும்கி படத்தின் இரண்டாவது பாகத்தை  மோஷன் போஸ்டர் உடன் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். கும்கி படத்தின் முதல் பாகத்தில் உயிரிழக்கும் யானை மீண்டும் பிறந்து விட்டேன்  என்ற வாசகத்துடன் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 


கும்கி படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்குகின்றார்.  இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கின்றார்.  மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த படத்தின் அறிமுக வீடியோவை பகிர்ந்த சிம்பு, தனது வாழ்த்துக்களை படக் குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Advertisement