தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா ரூத் பிரபு. தனது அழகு, நடிப்புத் திறன் மற்றும் திரைத் தேர்வுகளால் இந்திய சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்தியுள்ளார். சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாகவும், நேர்மையாகவும் இருக்கும் நடிகையாகவும் திகழும் சமந்தா, சமீபத்தில் பங்கேற்ற ஒரு பேட்டியில் தான் மேடைகளில் எமோஷனலாக கண்ணீர் விடுவதற்கான உண்மையான காரணத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

'மாஸ்கோவின் காவிரி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, அதன் பிறகு நீதானே என பொன்வசந்தம் , கத்தி , தெறி, மெர்சல் மற்றும் சீமராஜா போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் இடம்பிடித்தார்.
சமந்தா கடந்த சில வருடங்களாக ஆரோக்கிய சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்தார். குறிப்பாக மயோசிடிஸ் எனும் ஒரு தற்காலிக தசை நோய் பீடிக்கப்பட்டதையடுத்து, சில மாதங்களுக்கு திரைத்துறையில் இருந்து ஓய்வெடுத்தார். இந்த நிலைமையை அவர் வெளிப்படையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தபோது, அவரது மனதளவிலான வலிமையை ரசிகர்கள் பாராட்டினார்கள்.

அண்மையில் பல சமயங்களில் சமந்தா மேடைகளில் பேசும்போது கண்ணீர் வருவது போன்ற காட்சிகள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. இது குறித்து பலரும் "பிரியமான உறவுகளிலிருந்து விலகிய வேதனையா?" என்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் சமந்தா சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், தன்னைப் பற்றிப் பரவிய இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் மேடையில் கண் கலங்குவது எமோஷனலாக இருப்பதால் இல்லை. உண்மையில் என் கண்கள் ஒரு குறிப்பிட்ட அளவைவிட அதிகமான வெளிச்சத்தை சந்தித்துவிட்டால் கண்ணீர் வரும். அது ஒரு சென்சிடிவிட்டி. அதை மக்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்." எனத் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது.
Listen News!