உலகப் புகழ் பெற்ற இசைஞானி ஏ.ஆர். ரகுமான் மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் இடையே சட்ட பூர்வமான காப்புரிமை மோதல் உச்ச கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பான முக்கியமான திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய “பொன்னியின் செல்வன் 2” திரைப்படத்தில் இடம்பெற்ற “வீரா ராஜா வீர..” என்ற பாடல் இசை மற்றும் பாடலாசிரியர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒரு தனிப்பட்ட நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றம், ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.2 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது. இது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மெட்ராஸ் டாக்கீஸ் உடனடியாக மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற டிவிசன், தற்பொழுது “ரூ.2 கோடி செலுத்த வேண்டும்.” என்ற உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது.
Listen News!