விஜய் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அரசியல் தலைமைகள் மத்தியிலும் பிரபலமான ஒருவராக காணப்படுகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக கோட் படம் வெளியானது. தற்போது தனது 69ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்துடன் சினிமா துறையில் இருந்து விலகி முழு நேரமாகவே அரசியலில் பயணிக்க உள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியல் சார்ந்த களப்பணிகளில் விஜய் ஈடுபட்டு வருகின்றார். அதிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவே சென்று உதவுவது என பல்வேறு மக்கள் சார்ந்த பணியினை நேரடியாகவே செய்தார்.
d_i_a
இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை அதிகார்வபூர்வமாக ஆரம்பித்து அது தொடர்பிலான அறிக்கையையும் வெளியிட்டார். அதன் பின் விஜயின் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் அவருடைய கட்சியில் தொண்டர்களாகவே இணைந்தார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய் மக்களை விட நடிகைகளுக்குத்தான் முக்கியம் கொடுக்கின்றார் என்று பிரபலம் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். தற்போது அவர் கொடுத்த பேட்டி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், நடிகர் விஜய்க்கு அரசியலில் பெரிதாக ஈடுபாடு இல்லை. அவர் ஒன்றோ இரண்டு கூட்டங்களை தான் நடத்தி உள்ளார். அதனால் தான் நடிகைகளுக்கு பின்னால் செல்லுகின்றார். கீர்த்தி சுரேஷ் அவர் நடித்த படங்களில் முக்கியமான ஒருவராக காணப்படுகின்றார். இதனாலே அவருடைய திருமணத்திற்கு நேரில் சென்றார்.
விஜய் இன்னும் அரசியலில் சீரியஸாக இறங்கவில்லை. மாநாட்டில் மட்டும்தான் பெரிதாக குரல் கொடுத்தார். இதை வைத்தே மீடியாக்கள் பெரிதாக பேசிப் பேசி வருகின்றார்கள்.
ஆனால் அவர் இன்னும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கவில்லை. அவருடைய கட்சி எங்கே இருக்கின்றது கூட தெரியவில்லை இதனால் அவர் இன்னும் அரசியலுக்கு வரவே இல்லை என்றுதான் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!