விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.
அதில் மனோஜின் பழைய காதலி ஜீவா கனடாவில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு வருகின்றார். இதன்போது முத்துவுக்கு போன் பண்ணி ஏர்போர்ட்டில் நிற்குமாறு சொல்லுகின்றார். முத்துவும் பிளேட் அங்கே இறங்கும்போது நான் நிற்பேன் மேடம் என்று சொல்கின்றார்.
d_i_a
இதை தொடர்ந்து முத்துவின் காரில் ஏறிய ஜீவா, நான் போன தடவை வந்தபோதே ரிஜிஸ்ட்ரேஷன் விஷயமாகத்தான் வந்தேன். ஆனால் இரண்டு பிராடுகள் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லுகின்றார்.
இதைக்கேட்ட முத்து அது யார் என்று சொல்லுங்கள் மேடம்.. எங்களுக்கு தெரிஞ்ச நிறைய பொடியங்கள் இருக்காங்க கண்டுபிடித்துவிடலாம் என்று ஜீவாவுக்கு சொல்லுகின்றார். இதன்போது ஜீவாவும் அவர்களைப் பற்றிய விஷயங்களை முத்துவிடம் சொல்ல முனைவதாகவே குறித்த ப்ரோமோ காட்டப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் மனோஜூம் ரோகிணியும் போலீஸ் ஸ்டேஷனில் நிற்கின்றார்கள். ஜீவாவும் அதே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றார். இவர்கள் இருவரும் ஒரே ஸ்டேஷனில் நிற்கும் போது மனோஜ் பற்றிய விஷயங்களை முத்துவிடம் ஜீவா சொல்லுவாரா? ரோகிணியின் மொத்த ஆட்டமும் முடிவுக்கு வருமா என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்.
Listen News!