லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது செல்போனில் ஒன்பது ஆண்டுகளாக பத்திரமாக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை தனது இன்ஸராக்கிரமில் ஷேர் செய்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா முதல் முறையாக நடித்த படம் நானும் ரௌடி தான். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த நானும் ரௌடி தான் படம் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி ரிலீஸாகி வெற்றி பெற்றது.

அந்த படத்தில் நயன்தாராவை விஜய் சேதுபதி காதுமா என அழைத்தது வைரலானது. மேலும் ஆர் யூ ஓகே பேபி என விஜய் சேதுபதி பேசிய வசனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்த சூப்பர் ஹிட் படம் ரிலீஸாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது தான் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் வந்தது.அந்த படம் மூலம் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கிடைத்தார்.

இந்நிலையில் நானும் ரௌடி தான் படம் ரிலீஸாகி ஒன்பது ஆண்டுகள் ஆனதையொட்டி இன்ஸ்டாகிராமில் ஸ்பெஷல் போஸ்ட் போட்டிருக்கிறார் நயன்தாரா. இதோ அந்த அழகிய வீடியோ...
                             
                            
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!