பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் கதிரைப் பார்த்து உங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணவா இங்க வந்திருக்க என்று கேட்கிறார். அதுக்கு கதிர் அப்படி எல்லாம் கிடையாது என்கிறார். மேலும், அங்க அம்மா அழுதிட்டு இருக்காங்க அது உங்களுக்கு ஒரு விசயமாவே தெரியலயா என்கிறார் கதிர். மறுபக்கம், செந்தில் மீனாவை இங்க இருந்து கிளம்பு என்று கோபமாகச் சொல்லுறார்.

அதைக் கேட்ட சரவணன் சண்டை எல்லாம் பிடிக்காத என்கிறார். பின் பாண்டியன் வீட்டில நிம்மதி இல்ல என்று தான் கோவிலுக்கு வந்தேன் இங்கயும் நிம்மதி இல்லாம செய்திட்ட என்று கதிர் கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் என்னோட வீட்டுக்கு வாங்க என்கிறார். அதைத் தொடர்ந்து மீனா செந்திலை நான் பார்த்துக்கிறேன் நீங்க எதை நினைத்தும் கவலைப்படாதீங்க என்று கோமதியைப் பார்த்துச் சொல்லுறார்.
அதைத் தொடர்ந்து பாண்டியன் கதிரைப் பார்த்து தங்கமயில் பண்ணத தான் இப்ப உங்க அம்மாவும் செய்திருக்கா என்கிறார். பின் செந்தில் மீனாவைப் பார்த்து ஏதாவது ஒரு விஷயத்தை தன்னும் எனக்குச் சொல்லுறியா என்று கோபமாக கேட்க்கிறார். அதைக் கேட்ட ராஜி சம்மந்தப்பட்ட ஆட்களே எதுவும் சொல்லல நான் எதுக்காக சொல்ல போறேன் என்கிறார்.
பின் செந்தில் தங்கமயிலுக்கும் உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல என்கிறார். இப்புடியே ரெண்டு பேரும் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த பாண்டியன் கிட்ட கோமதி மன்னிப்புக் கேட்க்கிறார். அதுக்கு பாண்டியன் இனிமேல் நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. பின் ராஜி கதிர் கிட்ட நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என்று மன்னிப்புக் கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!