தெலுங்கு பட இயக்குநரும் நடிகருமான தருண் பாஸ்கர் மற்றும் நடிகை ஈஷா ரெப்பா முக்கிய வேடங்களில் நடித்துள்ள காதல் நகைச்சுவை படம் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம், மலையாளத்தில் முன்னதாக வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ரீமேக் திரைப்படம் என்றாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற வெவ்வேறு மொழி ரசிகர்களிடையே, புதிய பரிமாணத்தில் கதையை ரசிக்க ஒரு வாய்ப்பு வழங்குகிறது. இதனால் ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ திரைப்படத்தை இயக்கியவர் ஏ.ஆர். சஜீவ். முன்னதாக பல வெற்றிகரமான காதல் மற்றும் நகைச்சுவை படங்களை இயக்கிய இவர், ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப எமோஷனல் காம்பினேஷன் கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது.
படத்தின் வெளியீட்டுத் தேதியான 30-ஐ முன்னிட்டு, நடிகை ஈஷா ரெப்பா ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து, படத்தின் காட்சிகள் மற்றும் நடிப்பை பற்றிய சில உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.
அவர் பேட்டியில், “படத்தில் அறைவது தொடர்பான பல காட்சிகள் இருக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். அந்த காட்சிகள் சிறப்பாக வர வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். ஒரு காட்சியில் தருண் பாஸ்கர் கையில் சட்னியோடு என்னை நிஜமாகவே அறைந்தார். அந்த காட்சி முடிந்த பிறகு, சுமார் 10-15 நிமிடங்கள் அழுதேன்.” என்று கூறியிருந்தார். இந்த உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
Listen News!