நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம். வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகளவில் வெளியாகவுள்ளது.

அமரன் படத்தின் முதல் விமர்சனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படத்தின் சென்சார் முடிந்த நிலையில், படம் தீயாக உள்ளது என முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் 'அமரன் - ஹிட்' என்றும் கூறி விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். இதனால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
 
                              
                             
                             
                             
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!