• Jan 18 2025

அது ரொம்பவே தப்பு! ஐஷு பிக் பாஸ் போனதுல எனக்கு விருப்பமே இல்ல! மன வேதனையில் ஐஷு அப்பா!

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கால்வாசி பேர் தங்களுடைய பெயரை கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் ரொம்பவும் பாதிக்கப்பட்டவர்கள் லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் தான் ஐஷு. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் மட்டுமில்லாமல் அவருடைய பெற்றோர்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டு விட்டார்கள்.


பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட அமீர் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானார்கள் தான் சைஜி- அஷ்ரப் தம்பதியினர். அதை வைத்து தான் ஐஷு பிக் பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொண்டார்.

ஐஷு ஆரம்ப காலகட்டத்தில் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளராக மக்களால் பார்க்கப்பட்டார்.பிறகு காதல் கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக பெயரை கெடுத்துக் கொண்டார்.


ஐஷு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியில் வந்த பிறகு அந்த நிகழ்ச்சி பற்றி எதுவுமே பேசவில்லை. மொத்தமாக ஒரு மன்னிப்பு கடிதம் பகிர்ந்து விட்டு அமைதியாக இருக்கிறார்.

அவருடைய குடும்பமும் இதுவரை அந்த நிகழ்ச்சி பற்றி எதுவுமே பேசவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஐஷுவின் அப்பா அஷ்ரப் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியிருக்கிறார்.


அதில் ஐஷு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கிறார் என்பது தனக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தான் தெரியும் என சொல்லி இருக்கிறார்.

ஐஷுவை அந்த நிகழ்ச்சியின் கலந்து கொள்ள வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்திருக்கிறார். ஐஷு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு முட்டுக்கட்டையும் போட்டு பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் மகளின் பிடிவாதத்தை தவிர்க்க முடியாமல் தான் அனுமதி அளித்திருக்கிறார்.


நானும் என்னுடைய குடும்பமும் இத்தனை வருடங்களாக சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனத்தையும் எதிர்கொண்டது கிடையாது. ஆனால் ஐஷு பிக் பாஸ் போனதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கையே மொத்தமாக மாறிவிட்டது.

போனை எடுத்தாலே முழுக்க நெகட்டிவ் விமர்சனங்கள் தான் இருக்கும். ஒரு போட்டியாளரை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவரை விமர்சிக்கலாம், அவர்களுடைய குடும்பத்தையும் சேர்த்து விமர்சிப்பது ரொம்பவே தப்பு என அஷ்ரப் சொல்லி இருக்கிறார்.


எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கடிதம் பகிர்ந்தது முழுக்க அவருடைய சொந்த முடிவு தான் என்பதையும் தெளிவு படுத்தி இருக்கிறார் அஷ்ரப்.

என்ன நடந்தாலும் ஐஷு என் மகள், அவளுடைய கனவை நிறைவேற்றுவதற்கான எல்லா கதவுகளும் மூடப்பட்டாலும், அந்த அறையில் இருக்கும் ஜன்னலயாவது திறக்க கண்டிப்பாக நான் முயற்சி செய்வேன் என்று மனம் உருகி பேசி இருக்கிறார் ஐஷு வின் அப்பா அஷ்ரப்.

Advertisement

Advertisement