தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நேற்றைய தினம் தஞ்சாவூரில் தனது பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். இதன்போது அவருடைய ஆதரவாளர்களும் தொண்டர்களும் அவரை பார்க்க முந்தியடித்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இன்னொரு பக்கம், மனைவி சங்கீதா விஜய்க்கு விவாகரத்து கொடுத்த தகவலும் தீயாய் பரவி வருகிறது. தனக்கு விஜயுடன் வாழ விருப்பமில்லை, அவருக்கு வேறு ஒரு நடிகையுடன் தகாத உறவு இருக்கிறது, அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது என சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுவது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் தளத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதைத்தொடர்ந்து விஜயின் பெண் ரசிகர்கள், 'சங்கீதா போனால் என்ன? விஜய்க்கு நாங்க அக்காவா, தங்கச்சியா, ஏன் பொண்டாட்டியாக கூட இருந்துட்டு போறோம்' என பேசியிருந்தனர்.

அதேபோல் நேற்றைய தினமும், 'குப்பை பொறுக்குறவனுக்கு இரண்டு பொண்டாட்டி வைத்திருக்கான், கூட்டுறவள் நாலு புருஷன் வைத்திருக்கா, பணக்காரன் 10 பொண்டாடி வச்சு இருக்கான்.. எங்க கிட்ட காசு இருக்கு, நாங்க வைத்துக்கிறோம், உங்களுக்கு என்ன?' என பேசியிருந்தார்..
இந்த நிலையில், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “தலைவனின் சொல்லுக்கு கட்டுப்படாத குஞ்சுகள்… குஞ்சுகளை கண்ட்ரோலில் வைக்க தெரியாத தலைவன். இந்த லட்சணத்தில்… காசு தராமல் கூடும் கூட்டமென பெருமை பீத்தல் வேறு.
இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க உத்தேசம்?.' என விஜய்க்கு எதிராக பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!