தமிழ்
சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு
அல்லது
ஐந்து
திரைப்படங்கள் வெளியானாலும் அந்த
படங்கள் அனைத்துமே சுமாரான வெற்றி
அல்லது
தோல்வி
அடைந்து வருவது
தயாரிப்பாளர்களுக்கு பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஒரு
படம்
தோல்வி
அடைந்தால் அந்த
படத்தில் நடித்த
நாயகன்,
நாயகி
மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட
யாருக்கும் எந்த
நஷ்டமும் ஏற்படப்போவதில்லை, அவர்களுடைய சம்பளம் வழக்கமாக வந்து
விடுகிறது. ஆனால்
ஒரு
படம்
தோல்வி
அடைந்தால் அதன்
முழு
பாதிப்பும் தயாரிப்பாளரை சென்றடைவதால் தயாரிப்பாளர்கள் தற்போது மிகுந்த சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரிய
பெரிய
கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட
அடுத்த
படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்கு பணம்
இல்லாமல் திண்டாடி வருவதாகவும், அதற்கு
அவர்கள் தயாரித்த முந்தைய படங்களின் தோல்வி
தான்
காரணம்
என்றும் கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக 2024 ஆம்
ஆண்டு
வெளியான ’அயலான்’
’கேப்டன் மில்லர்’ ’மெர்ரி
கிறிஸ்மஸ்’ ’லால்
சலாம்’
உள்ளிட்ட பல
படங்கள் வந்தாலும் அந்த
படங்கள் எதுவுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் ’லவ்வர்’
’வடக்கப்பட்டி ராமசாமி ’ ’மிஷின்
சாப்ட்வேர் ஒன்’
உள்ளிட்ட சில
படங்கள் மட்டுமே சுமாரான வெற்றியை பெற்றதாகவும் தெரிகிறது.
எனவே
கோடிக்கணக்கில் முதலீடு செய்து
படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க தயங்கி
வருவதாகவும், குறிப்பாக ஹீரோக்கள் சம்பளம் தற்போது உச்சத்திற்கு சென்று
உள்ளதை
அடுத்து படத்தின் பட்ஜெட் அதிகமாகி வருவதால் படத்தயாரிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
திரையுலக பிரமுகர் ஒருவர்
சமீபத்தில் அளித்த
பேட்டியில் ’தற்போது வழக்கமான படப்பிடிப்பிலிருந்து பத்து
சதவீத
படப்பிடிப்பு மட்டுமே நடைபெற்று வருவதாகவும் இதே
ரீதியில் சென்றால் தமிழ்
சினிமாவுக்கு மூடு
விழா
ஏற்படும் அபாயம்
இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு
ஒரே
வழி
படத்தின் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்றும் அதற்கு
ஹீரோக்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் மலையாள
சினிமா
போன்று
கதைக்கும் மேக்கிங்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஹீரோக்களின் சம்பளத்தை குறைத்தால் மட்டுமே தமிழ்
சினிமாவுக்கு விமோசனம் என்றும் இல்லை
என்றால் தமிழ்
சினிமா
இன்னும் ஒரு
சில
ஆண்டுகளில் மூடு
விழா
காணும்
என்றும் அவர்
தெரிவித்தார்.
Listen News!