• Jan 19 2025

திருட்டு பையன் கட்டின தாலியை கழட்டி எறிஞ்சிட்டு வா..! ராஜி எடுத்த முடிவு? ட்விஸ்ட் வைத்த அப்பத்தா! பைனலி பாக்கியா எஸ்கேப்..

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கம் தொடரில் இன்று என்ன நடைபெற போகிறது என பார்ப்போம்.

ராஜியும் கதிரும் திருமண கோலத்தில் வந்து நிற்க இரு வீட்டாரும்  அதிர்ச்சியடைந்து நிற்கிறார்கள்.

இவன் தான் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பான் என்று குமார் சொல்ல, நான் உன் தங்கச்சிய கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனேனா? என்று உன் தங்கச்சிய கேளு என கதிர் அவருக்கு பதிலடி கொடுக்கிறார்.

இதுக்கெல்லாம் நீதான் காரணம்,  உன்ன கொல்லாம விட மாட்டேன் என்று அருவாவை எடுப்பதற்கு சக்திவேல் வீட்டுக்குள் செல்ல, எல்லோரும் அவரை தடுத்து நிறுத்துகிறார்கள்.

பாண்டியன் தான் தங்களது குடும்பத்திற்கு பிளான் பண்ணி இப்படி செய்ததாக குற்றம் சாட்ட, அந்த நேரத்தில் கதிர் பாண்டியனிடம்  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்.


எனினும், நகை பணம் எல்லாம் எங்கடா என்று கேட்டு, கதிருக்கு பளார் பளார் என அடி விழுகிறது. அதற்கு கதிர், அது எல்லாம்  செலவாகிவிட்டது என்று பதில் சொல்கிறார்.

அதன் பிறகு சக்திவேல் போலீசில் கம்பளைண்ட் கொடுக்கச் செல்ல, அப்பத்தா வேணாம் என்று நிறுத்துகிறார். மேலும் அவர், ராஜி இப்போ யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா? சொந்த அத்தை பையனை தானே கல்யாணம் பண்ணி வந்துட்டு இருக்கா..

இவ்வளவு நாளும் ராஜியை தேடி திரிஞ்சம், இப்போ ராஜி வந்த பிறகு நக பணம் என்று பேசுறீங்க... என்னதான் அணை போட்டு நிறுத்தினாலும் ஆறு கடலில் போய் சேர தான் செய்யும் என்று அப்பத்தா சொல்கிறார்.

இதை தொடர்ந்து எல்லாத்தையும் மறந்துட்டு அவன் கட்டின தாலியை கழட்டி எறிஞ்சிட்டு என்ட பிள்ளையா உள்ள வார என்டா வா என முத்துவேல் சொல்ல, அப்பத்தா மட்டும் தாலியை கழட்டி போட்டால்  அடுத்த நிமிஷம் நான் என் உயிரை விட்டுவிடுவேன் என்று கூறுகிறார்.

இதனால் கோபம் அடைந்த முத்துவேல் இனி உனக்கும் எனக்கும் இந்த குடும்பத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. நீ எனக்கு பொண்ணும் கிடையாது, இனி எங்க வீட்டுக்கு ஒரே பையன் தான் அது குமார் மட்டும்தான் என்று தலைமுழுகி வீட்டுக்குள்ளே செல்ல, எல்லாரும் முத்து வேலை பின் தொடர்ந்து சென்று விடுகிறார்கள்.

மறுபக்கம் ராதிகா, கோபி, இனியா மூவரும் ஊருக்கு கிளம்பி செல்கிறார்கள்.

இதை தொடர்ந்து ராஜி, கதிரை நீங்களாவது வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என பாண்டியனிடம் பாக்கியா சொல்ல, எல்லாம் என்ன கேட்டா நடக்குது இங்க? வீட்டுக்குள்ள வாரத்துக்கு மட்டும் என்ன கேக்கணுமா? என பாண்டியன் சொல்லி செல்ல, பாக்கியா கதிர் மற்றும் ராஜிஜை வீட்டுக் அழைத்துச் செல்கிறார்.

இதன்போது பசங்கள பத்தி நம்மளுக்கு நிறைய கனவு இருக்கும். ஆனா அவங்க சில சமயத்தில் அதை எல்லாம் தூக்கி போட்டுடுவாங்க. ஆனாலும் நாம அவங்க பக்கம் தான் நிக்கணும். அவங்களும் பெத்தவங்க கிட்ட தான் வந்து நிப்பாங்க.

நானும் என்னுடைய பிள்ளைங்க விஷயத்தில் அப்படித்தான் நின்னு இருக்கன். நீங்களும் அதே மாதிரி இருப்பீங்க என நம்புகிறேன். இவங்களை உங்க கிட்ட ஒப்படைச்சிட்டேன் என்று பாண்டியனுக்கு சொல்ல, பாண்டியன் பதில் ஏதும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார்

அதன் பிறகு ராஜிடம் பேசிய பாக்கியா, எல்லாருமே உனக்காக கஷ்டப்பட்டு இருக்காங்க.. உன் கூட நின்னு இருக்காங்க.. அந்த நன்றியை நீ என்னைக்கும் மறக்கக்கூடாது என்று ராஜிக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.

அது போலவே கதிரிடமும், நீ அப்படியே என் பிள்ளை எழில் மாதிரி. அவன் எனக்காக என்ன வேணாலும் செய்வான். அதுபோலவே நீயும் உன் அம்மாவுக்காக எல்லாம் செஞ்சிருக்க நீ நல்லா வருவா என்று வாழ்த்து கூறி எழிலும் பாக்கியாவும் சென்னைக்கு கிளம்பி வருகிறார்கள்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் மகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement