• Oct 09 2024

விளம்பர பைத்தியங்கள்.. சூர்யா-ஜோதிகா வொர்க்-அவுட் வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில் இன்று அவர் தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலர் கலாய்த்து கமெண்ட் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா தம்பதிகள் தற்போது மும்பையில் வசித்து வரும் நிலையில் மும்பையில் இருந்து கொண்டே படப்பிடிப்புக்கு சென்று வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. சூர்யா ’கர்ணா’ என்ற பாலிவுட் படத்திலும், ஜோதிகா ஓரிரு பாலிவுட் படத்தில் நடித்து கொண்டிருப்பதால் மும்பையில் அவர்கள் செட்டில் ஆகிவிட்டதாவும் அவர்களது குழந்தைகள் கூட மும்பையில் உள்ள பள்ளிகளில் தான் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ஜோதிகா, அவ்வப்போது மும்பை ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இருவரும் இணைந்து ஒரு வொர்க்-அவுட் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பல பாசிட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்களான ரித்திகா, சாந்தினி, மாதவன், விஜய் டிவி விஷ்ணு உள்ளிட்ட பலர் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர். 

இருப்பினும் ஒரு சில நெட்டிசன்கள் ’விளம்பர பைத்தியங்கள்’ என்றும் ’இது போன்ற வீடியோவை பர்சனலாக அவர்களாகவே வைத்துக் கொள்ளலாம், எதற்காக பொதுவெளியில் வெளியிடுகிறார்கள்’ என்றும் ’ஊரில் யாரும் ஜிம்மே போனதில்லையா? என்றும் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Advertisement