• Jan 19 2025

ரகுலுக்கு இளைஞர் கொடுத்த வலுக்கட்டாயமான முத்தம்.. கணவர் பார்த்தால் என்ன நினைப்பார்?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவருக்கு இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கும் காட்சி இருப்பதை எடுத்து இந்த வீடியோவை அவரது கணவர் பார்த்தால் என்ன நினைப்பார் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங், கடந்த 15 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் ‘இந்தியன் 2’ உள்பட ஒரு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பாக்லானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் சில கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவரது பதிவிற்கு அவரது 23 மில்லியன் ஃபாலோயர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவர் வலுக்கட்டாயமாக அவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த முத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் ரகுலுக்கு முத்தம் கொடுத்தவர் அவரது உடன் பிறந்த சகோதரர் என்பது இது அவரது பிறந்தநாளில் கொடுத்த அன்புப்பரிசு என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரகுல் அந்த பதிவில் ’சிறு வயது முதல் நாம் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பலமுறை சண்டை போட்டும் இருந்துள்ளோம், அதெல்லாம் நமக்கு அழியாத நினைவுகளாக இருக்கிறது, இந்த பிறந்த நாளில் உனக்கு என் வாழ்த்துக்கள், வாழ்க்கையில் நீ நல்ல முறையில் வளர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரகுலுக்கு முத்தம் கொடுத்தது அவரது உடன்பிறந்த சகோதரர் என்பதை அறியாத சில நெட்டிசன்கள் இந்த முத்த வீடியோவை அவரது கணவர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement