நடிகர் சூர்யா நடிப்பில் படம் வெளியாகி நீண்ட காலம் ஆகிவிட்டதால் அவருடைய ரசிகர்கள் வெறித்தனமான காத்திருக்கும் திரைப்படம் தான் கங்குவா. ரசிகர்களின் கொலை பசிக்கு 'கங்குவா' படம் தரமான தீனியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதன் அடுத்த அப்டேட் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது வரலாற்று படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாகி வருகிறது. அந்த வகையில் கோலிவுட்டின் பிரம்மாண்ட படைப்பாக கேப்டன் மில்லர், தங்கலான் மற்றும் கங்குவா படங்கள் உருவாகி வருகின்றன. இதில் 'கங்குவா' படம் சூர்யாவின் திரை வாழ்வில் மிகப்பெரிய மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பேமிலி டிராமா படங்களை இயக்கி வருபவர் சிறுத்தை சிவா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான 'சிறுத்தை' படம் மூலமாக கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனவர். இந்நிலையில் தற்போது அவரது அண்ணன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'கங்குவா' படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள 'கங்குவா' படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தற்போது பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், 'கங்குவா' படம் 38 மொழிகளில் 3D மற்றும் IMAX தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மார்கெட்டிங் மற்றும் ரிலீசில் பல எல்லைகளை இப்படம் கடக்கும் எனவும் கூறியுள்ளார். இந்த படத்தின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!