• Sep 28 2024

எனது பிறந்தநாள் கொண்டாட கூடாது ! ரசிகர்களுக்கு விஜய் வேண்டிக்கொள்! வெளியாகிய அறிக்கை!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயின் பிறந்தநாள் நாளைய தினம் ஆகும். இதை ரசிகர்கள் கொண்டாட இருந்த நிலையில் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுதிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் "தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் அவர்கள் உத்தரவு! தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 


எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement