• Sep 02 2025

'மிராய்' பட ட்ரெய்லரை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்.. வெளியான லேட்டஸ் கிளிக்ஸ்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

நடிகர் தேஜா சஜ்ஜா மற்றும் ரித்திகா நாயக் நடித்த "மிராய்" திரைப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் கார்த்திக் கட்டம்மேனி இயக்கத்தில், பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன்  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக் மற்றும் தேஜா சஜ்ஜா முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் 2D மற்றும் 3D வடிவத்திலும் திரையிடப்பட இருக்கிறது. 


இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் 'மிராய்' பட ட்ரெய்லரை பார்த்துவிட்டு மனோஜ் மஞ்சு மற்றும் அவர்களுடைய டீமையும் பாராட்டி உள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement