• Jan 19 2025

சுந்தர் சி அடுத்த படத்திலும் தமன்னா.. இந்த முறையாவது பாடலை கடைசியில் வச்சிராதீங்க..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சுந்தர் சி நடித்து இயக்கிய ’அரண்மனை 4 ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்நிலையில் சுந்தர் சி அடுத்த படம் என்பது அநேகமாக ’அரண்மனை’ ஐந்தாம் பாகமாக இருக்கும் அல்லது ’கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளையும் சுந்தர் சி தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது சுந்தர் சி, வடிவேலுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தற்போது இருவரும் பல ஆண்டுகளாக இணையவில்லை.



இந்த நிலையில் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது மீண்டும் சுந்தர் சி, வடிவேலு ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் நாயகனாக சுந்தர் சி நடித்து இயக்க உள்ளதாகவும், நாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாகவும் வடிவேலு இந்த படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி அடுத்த படத்தில் தமன்னா நடித்த இருப்பதாக வெளியாக செய்தியை அடுத்து இந்த படத்திலாவது தமன்னாவின் பாடலை ஆரம்பத்திலேயே போட்டு விடுங்கள் என்றும் ’அரண்மனை 4’ படம் போல் கடைசியில் டைட்டிலின் போது போட வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே ’ஜெயிலர்’ திரைப்படத்திலும் தமன்னாவின் பாடலை பிட்டு பிட்டாக நெல்சன் வைத்து சொதப்பிவிட்டார் என்றும் இந்த முறையாவது தமன்னா பாடல் சொதப்பாமல் வெளிவர வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement