• Jan 19 2025

இயக்குனர் அமீர் வீட்டில் திடீர் சோதனை! வீடு பூட்டி இருக்கு அப்ப அமீர் எங்க?சோதனையில் கிடைச்சது என்ன தெரியுமா?

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவுக்கென்றே தவிர்க்க முடியாத பல அருமையான திரைப்படங்களை வழங்கியவர் இயக்குனர் அமீர். கார்த்தி நடித்த பருத்திவீரன்  , ஜெயம்ரவி நடித்த ஆதிபகவன் என பல வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்த இவர் சமீபத்தில் சட்டவிரோத பொருள் தொடர்பாக பிரச்சனையில் சிக்கியுள்ளார்.


சமீபத்தில் இந்தியாவில் 2000 கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.குறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜாபர் சாதிக் தலைமறைவாகி இருந்த நிலையில் கைதுசெய்யவும் பட்டார். குறித்த நபர் அமீரின் நெருங்கிய நண்பர் என்பதனால் இவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமீர் விசாரிக்கப்பட்டு வந்தார்.


இந்த நிலையிலேயே இயக்குனர் அமீரின் வீட்டை திடீர் என சோதனை செய்தது அமலாக்கத்துறை. சேத்துப்பட்டியில் உள்ள முக்தார் கார்டன் இல்லத்தை 2 வருடங்களுக்கு முன்பு  அமீர் வாங்கியதாக தகவல் கிடைத்த நிலையில் குறித்த வீட்டை சோதனை செய்தனர். வீடு பூட்டி இருந்ததினால் 10 நிமிடம் காத்திருந்த அதிகாரிகள் பின்பு முழுமையாக சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement