சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை என்ற கேரக்டரில் நடித்தவர்தான் நடிகை சத்யா தேவராஜன். இவர் இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றார்.
எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளையும் தாண்டி இளைஞர்களையும் பார்க்க வைத்த பெருமையை பெற்றது. இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களிலேயே அதிகமாக பேசப்பட்ட சீரியலாகவும், டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்ற சீரியலாகவும் காணப்படுகிறது.
d_i_a
அதற்கு காரணம் இந்த சீரியலில் நடித்தவர்கள் இயல்பான கேரக்டரில் நடித்ததுதான். மேலும் இதன் கதையும் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக இடம்பெற்ற மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு இந்த சீரியலின் கதை வேறு விதத்தில் பயணிக்க ஆரம்பித்தது. இதனாலையே சரிவை சந்தித்து திடீரென முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை சத்யா புதிய சீரியல் ஒன்றில் களமிறங்க உள்ளார். அதுவும் விஜய் டிவி சீரியலில் களம் இறங்க உள்ளார்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சன் டிவியில் உங்கள் பருப்பு வேகலையா? விஜய் டிவிக்கு திடீரென தாவி விட்டீர்களே என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
Listen News!