உலகப் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோவான, ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவால் திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
73 வயதான ஜாகிர் உசேன் இதய கோளாறு காரணமாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சில வாரங்களாகவே சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய திறமை கச்சேரிகளில் மட்டும் நின்று விடாமல் பல இடங்களில் பரவி காணப்பட்டது. உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் குழுவான தி பீட்டில்ஸுடன் இணைந்து பல இசைக்கச்சேரிகளில் வாசித்துள்ளார்.
ஜாகிர் உசேன் கிராம விருதும் வென்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போது அவர் உயிரிழந்து இருப்பது இசை கலைஞர்கள் முதல் இந்திய நாட்டிற்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!