• Feb 23 2025

நடிகர் சிம்புவுக்கு கிடைத்த புரமோஷன்...4 வருஷம் கழித்து பெரியப்பா ஆனார்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என  பன்முக திறமையாளராக காணப்படுபவர் தான் டி.ராஜேந்தர்.

இவர் நடிகை உஷா  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர் தான் சிலம்பரசன். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 

இவரை தொடர்ந்து டி.ராஜேந்தரனுக்கு குறளசரன் என்கிற மகனும், இலக்கியா என்கிற மகளும் உள்ளனர்.


இலக்கியா அபிலாஷ் என்பவரை காதலித்து 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு குறளரசன் தன்னுடைய காதலி நபீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் குறளரசன் - நபீலா ஜோடிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளுக்கு பின்னர்...  அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் டி.ஆர் மற்றும் உஷா டி.ஆர் மூன்றாவது முறையாக தாத்தா - பாட்டி ஆகியுள்ளனர். 

நடிகர் சிம்புவோ முதல் முறையாக பெரியப்பா ஆகியுள்ளார். மேலும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement

Advertisement