• Dec 05 2024

குஷி படத்தின் இரண்டாம் பாகமா? மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா..!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது ஒரு தவிர்க்க முடியாத நடிப்பரகனாக மாறியுள்ளனர்  எஸ் ஜே சூர்யா. இயக்குனராக இரு படங்களில் தன்னுடைய படைப்பு திறமையை காட்டியவர். சமீபத்திய படங்களில் வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டி வருகிறார். 


மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸாக நடித்து தற்போது வரை அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் வில்லனாகவே தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு படங்களிலும் இப்போது ஒரு தேடப்படும் நடிகராகவே மாறியிருக்கிறார். பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் எஸ் ஜே சூர்யா கண்டிப்பாக இருப்பார்.


இந்தியன் 2 படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. தற்போது கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்நிலையில்  எஸ் ஜே சூர்யா ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். வாலி மற்றும் குஷி ஆகிய இரு படங்களுமே இன்று வரை ஒரு எவர்கிரீன் படங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படமாக அமைந்துவிட்டன.


அப்படி ஒரு படைப்பாளியை மீண்டும் எப்பொழுது பார்க்க போகிறோம் என ரசிகர்கள் எஸ் ஜே சூர்யாவிடம் கேட்டு வருகின்றனர்.கேம் சேஞ்சர் ரிலீசுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என கூறினார். நியூ படத்தின் இரண்டாம் பாகத்தைப் போலவே தான் கில்லர் திரைப்படமும். அந்த படத்தை தான் ஜனவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப் போகிறேன் என பதில் கூறியிருக்கிறார்.


Advertisement

Advertisement