• Jan 18 2025

சூப்பர் சிங்கர் பாடகர் ஆசையை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்! அதிர்ச்சியில் பாடகி!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் பாடகர் ஆசையை நடிகர் சிவகார்த்திகேயன் நிறைவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் படத்திலும் நடித்து வருகிறார் சிவா. சமீபத்தில் தான் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரு வாரங்கள் நடக்குமாம். அதன்பின் அமரன் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு மீண்டும் எஸ்.கே. 23 படத்திற்கு வருவார் என சொல்கின்றனர்.


நமக்கு பிடித்த நடிகர், நடிகையை பார்க்க முடியுமா என நம்மில் பலரும் ஏங்கி இருப்போம். அப்படி ஒரு ரசிகை, நடிகர் சிவகார்த்திகேயனை பார்க்க வேண்டுமென பல நாட்களாக காத்திருந்துள்ளார். அந்த ரசிகை தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெயர் தன்ஸீரா. கேரளத்தை சேர்ந்த இவர் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 10ல் போட்டியிட்டு வருகிறார்.


இந்நிலையில், சூப்பர் சிங்கர் தன்ஸீராவிற்கு சிவகார்த்திகேயன் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவரை என்றாவது ஒரு நாள் பார்த்துவிட மாட்டோமா என ஏங்கி கொண்டிருந்த தன்ஸீராவை, சர்ப்ரைஸ் கொடுத்து சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். நடுவர்களை வணக்கம் சொன்ன சிவா என்னோட தங்கச்சி பார்த்து மார்க் போடுங்க என கூறியுள்ளார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement