• Jan 18 2025

சினிமா நடிகைகள் தவறான தொழில் செய்பவர்கள்! சேரன் செய்த டுவிட்! சர்ச்சையான பிரச்சினை!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வன்மையாக கண்டிக்கிறேன் என கூறி டுவிட் செய்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. சினிமா நடிகைகள் தவறான தொழில் செய்பவர்கள் என முன்னணி நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேட்டி கொடுத்த சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவரது வீடியோ இணையத்தில் தற்போது பரவி சர்ச்சை ஆகி இருக்கிறது.


இந்த விடயம் பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் காரணத்திற்காக ஒரு முன்னணி நடிகையின் பெயரை இப்படி கூறி இருப்பது பற்றி கண்டனங்கள் எழுந்து வருகிறது.இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி இயக்குனர் சேரன் கொந்தளித்து டுவிட்டர் தளத்தில் ட்விட் செய்திருக்கிறார்.


"வன்மையாக கண்டிக்கிறேன் எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்" என சேரன் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement