• Jan 18 2025

" கட்சி சேரா " பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய சாய் அபியங்கரின் வாழ்க்கை இதோ ....

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

 புகழ்பெற்ற இசையமைப்பாளர்,  பாடகர் மற்றும் தயாரிப்பாளர் சாய் அபியங்கர் . இவருடைய இசைக்கு மயங்கியே  Instagram இல் 60K பின்தொடர்கிறார்கள் . இது எல்லாவற்றிலும் அவர் பிரபலமாகியதை விட" கட்சி சேரா" என்ற ஒரே ஒரு பாடல் மூலம்  பட்டி தொட்டி , சிறுசு ,பெரிசு என மொத்தமாக  பிரபலமானார். சாய் அபியங்கர் எவ்வாறு இசை உலகிற்கு வந்தார் , அவருடைய வாழ்க்கை எப்பிடி ஆரம்பமானது  என்று அவருடைய வாழ்க்கை கதையை பார்க்கலாம் வாருங்கள், 


" சாயினுடைய முழுப்பெயர் சாய் அபியங்கர் இவருடைய அப்பா பாடகர்  திப்பு ,  அம்மா பாடகர் ஹரிணி இரண்டு பெயரும் பாடகர்கள் தான். இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார் . இவர் ஒரு இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று யாருக்குமே தெரியாது . " கட்சி சேரா" இந்த பாடல் மூலமாக தான்  இவர் யார் என்று தேடினார்கள் . அப்போது தான் இவர் பாடகர் திப்புவினுடைய மகன் என்று தெரிய வந்தது. 


சாயினுடைய வயது 19 இவரை தமிழ் ஹாரிபாட்டர் என்றும் சொல்லி வருகின்றனர். 6 வயதிலேயே இசை மேல் பிரியமாக இருந்த சாய் அந்த சின்ன வயதிலேயே இசை கற்று கொள்ள ஆரம்பித்து விட்டார். உயர் கல்வி தகைமையும் கொண்ட இவர் இசையை கைவிடவில்லை . அதனாலேயே இவருக்கு ஆர் ரஹ்மான் அவர்களின் இசையில் பாடுவதற்கு வாய்ப்பும் கிடைத்தது.13 வயதில் இருக்கும் போதே ரஹ்மான்னை பார்த்த இவர் அவரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்று கொண்டுள்ளார் .  இதை பார்த்த சாயினுடைய அப்பா அம்மா ரஹ்மான்னிடமே ஒப்படைத்து விட்டார்கள் . சாய் அவருடைய வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு ஒரு பெரிய வாய்ப்பை அமைத்து கொடுத்து இருக்கிறது .


முதல் முதலாக சாய்க்கு கோப்ரா படத்தில் வாய்ப்பு கிடைத்தது ,  அதில் இவர் மியூசிக் நிகழ்ச்சியாளராக வேலை பார்த்து இருக்கிறார் . அதனை தொடர்ந்து "பத்து தல ,ps one , லால் சலாம் இது போன்ற பல படங்களில் வேலை செய்வதற்கு வாய்ப்பும் கிடைத்தது .சாய் அவருடைய நண்பரை வைத்து பாடலும் எழுதி இருக்கிறார். நண்பரிடம் பல திருத்தங்களையும் திருத்தி கிட்ட தட்ட 6 பாடலுக்கு மேலாக கம்போஸ் பண்ணி இருக்கிறார் . நான்கு வருடமாக ரொம்பவே கஷ்டப்பட்டு வெளி வந்த பாடல் தான் " கட்சி சேரா " பாடல் ஆகும் .


இந்த பாடலில் அவருடன் இணைந்து நடித்த நடிகையும் இவருக்கு நல்ல பொருத்தம் என்றே சொல்லலாம் . இவர் அடுத்து படங்களில் நடிப்பாரா என்று பார்த்தால் அவர் படம் நடிக்கவே மாட்டாராம் . இந்த பாடல் மூலமாக ரொம்பவே பிரபலமானார். அது மட்டுமில்லாமல் பல பிரபல  நடிகர்களும் இவரை தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்லி இருக்கிறார்களாம் ."கட்சி சேரா " இந்த ஒரே ஒரு பாடல் மூலமாக தான் ஓவர் நைட்ல ஒபாமா ஆகிய கதை போல வேற லெவல் ஹிட் ஆனார் . இன்னும் இவருடைய இசை பயணத்தில் முன்னேறி சென்று கொண்டிருப்பவர் தான் சாய் அபியங்கர் .


Advertisement

Advertisement