• Mar 03 2025

விஜய் இடத்தை சிவகார்த்திகேயனால் பிடிக்க முடியாது..! உறுதியாக கூறிய நடிகர் ஷாம்..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்து பாத்துக்கோ என சொன்னதுக்கு பிறகு அனைவரும் அடுத்த தளபதி இவர் தான் என கூறிவருகின்றனர். இதற்கு சாதகமாக அமரன் படமும் அமைந்ததால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். 


இந்த நிலையில் தற்போது நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் நடிகர் ஷாம்மிடம் அடுத்த இளையதளபதி சிவகார்த்திகேயன் தானா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்  " அப்புடியெல்லாம் இல்லை அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அளவுக்கு வரமுடியுமா எண்டால் இல்லை தளபதி அண்ணா அவர் ஒரு மாஸ் அவருக்கு எண்டு தனி ஸ்டைல் இருக்கு அவரோட இடத்துக்கு சிவகார்த்திகேயனால் வரமுடியாது; அவருக்கு என தனி இடமுண்டு அவருக்கு ஒரு டைட்டில் மக்கள் கொடுப்பாங்க ரசிப்பாங்க எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் " என மிக தெளிவாக பதிலளித்துள்ளார்.


மற்றும் இவர் தற்போது அறிமுக படக்குழு ஒன்றுடன் படம் நடித்து முடித்துள்ளார். இப் படம் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement