• Mar 03 2025

ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேரவுள்ள இளம் நடிகை...! யார் தெரியுமா..?

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்போது சினி உலகில் கலக்கி வரும் நடிகர் கரிஷ் கல்யாண் பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் கடந்த ஆண்டு வெளியாகிய லப்பர் பந்து படத்தில் தனது சூப்பர் நடிப்பின் மூலம் மக்கள் மனதை வென்றார். இப் படத்தின் வெற்றியின் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார்.

இதை விட தற்போது இவர் லிஃட் பட இயக்குநர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பித்திருந்தாலும் படத்திற்கு கதாநாயகி கிடைக்காமையினால் வேலைகள் ஆமை வேகத்தில் நகர்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.


இந்நிலையில் தற்போது இப் படத்தில் நடிப்பதற்காக ஸ்டார் திரைப்பட கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன் தேதி வழங்கியிருப்பதாகவும் பரபரப்பாக படப்பிடிப்பு வேலைகளை படக்குழு ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விரைவில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement