• Jan 19 2025

எதிர்வரும் வாரங்களில் சிறகடிக்க ஆசை ஸ்கிரிப்ட் புஸ்வானமாக போகும்? க்ளூ கொடுத்த பிரபலம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியை தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் ஒரு சீரியல் ஆக காணப்படுவது தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருவதால் இதன் ரசிகர்கள் இந்த சீரியலை கொண்டாடி வருகின்றார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக காணப்படுவது தான் முத்து, மீனா கேரக்டர். இந்த சீரியல் ஒரு குடும்பக் கதையை மையமாகக் கொண்டு நகர்ந்தாலும் அதில் உள்ள ஏற்ற இறக்கங்களை அழகாக எடுத்துக்காட்டி வருகின்றது.

சாதாரண வீட்டில் மட்டுமின்றி பணக்கார வீடுகளிலும் உள்ள மாமியார் கொடுமைகளை சுட்டிக்காட்டி ஏழை வீட்டுப் பெண்ணான மீனாவை வீட்டு வேலை செய்ய வைத்து வெளுத்து  வாங்கும் மாமியாராக விஜயா, பணக்கார வீட்டு மருமகளான ஸ்ருதி, ரோகினியை பொத்தி பொத்தி பாதுகாக்கும் கேரக்டராகவும் இதில் காணப்படுகிறார்


சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது முன்னிலைக்கு வந்ததை தொடர்ந்து, இதில் நடிக்கும் நடிகர்களை பல்வேறு சேனல்களும் போட்டி போட்டு பேட்டி எடுத்து வருகின்றது.


இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பராக நடிக்கும் செல்வம் தனது இன்ஸ்டால் பக்கத்தில் புதிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாக உள்ளதாக ஒரு க்ளு  ஒன்றை கொடுத்துள்ளார்.

தற்போது அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் அவர் பாட்டு பாடுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது  தொடர்பில் தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் இப்படியே சொல்லி சொல்லி கடைசியில் புஸ்வானமாக போவது தான் உண்மை. இந்த சீரியலில் மீனாவும், முத்துவும் ஒரு ஊறுகாயாகத்தான் உள்ளார்கள் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement