• Jan 19 2025

மனோஜ் ஒரு சின்ன கேப்டன்.. தண்ணி அடிப்பாரா? உண்மையை உளறிய செல்வம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்துவின் நண்பர் செல்வம் என்ற கேரக்டரில் நடித்து வரும் பழனியப்பன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாலியான ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வார் என்பதும் குறிப்பாக ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து பல ரீல்ஸ் வீடியோக்களை அவர் பதிவு செய்து உள்ளார் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் உதவாக்கரையாக இருந்த மனோஜ் தற்போது தொழிலதிபர் ஆகி உள்ள நிலையில் மனோஜ் மற்றும் செல்வம் சந்திக்கும் காட்சியின் ரீல்ஸ் வீடியோவை பழனியப்பன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

எனக்கும் மனோஜுக்கும் சேர்ந்து வரும் காட்சிகள் மிகவும் அபூர்வம் என்றும், இன்று அந்த அபூர்வம் நடந்துள்ளது என்று கூறிய செல்வம், எனக்கு மனோஜ் ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.  இதை இரவாக இருந்தால் வேறு கேட்டிருப்பேன் என்றும் ஆனால் மனோஜ் ரொம்ப நல்ல பையன், தண்ணி எல்லாம் அடிக்க மாட்டார், நீங்கள் டிவியில் பார்க்கும் மனோஜ் அல்ல, இவர் ரொம்ப உத்தமபுத்திரன்’ என்று புகழாரம் சூட்டினார்.

அப்போது மனோஜ் இவ்வளவு தூரம் வந்துட்டீங்க எங்க கடையில ஏதாவது வாங்கிட்டு போங்க என்று காமெடியாக சொல்ல இந்த வீடியோ பழனியப்பன் இன்ஸ்டாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

மனோஜ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் இணைந்த காட்சிகள் இதுவரை அபூர்வமாகவே வந்துள்ள நிலையில் இருவரும் சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறியுள்ள நிலையில் விரைவில் அது குறித்த காட்சி ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement