• Jul 27 2024

ஹன்சிகாவை இவ்வளவு அசிங்கமாக காட்டிட்டாரே இயக்குனர்.. குவியும் கண்டனங்கள்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகின் அழகான நடிகைகள் பட்டியல் எடுத்தால் அதில் ஹன்சிகாவுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும் என்பதும் முதல் படமான 'எங்கேயும் எப்போதும்' என்ற படத்தில் இருந்து சமீப காலமாக அவர் நடித்த படங்கள் வரை அனைத்தும் அவரது அழகை இயக்குனர்கள் பிரமாதமாக காட்டி வருவார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் அவ்வளவு அழகாக இருக்கும் நடிகை ஹன்சிகாவை ஒரு இயக்குனர் அசிங்கமாக காட்டி இருக்கிறார் என்றால் அது இயக்குனர் ஆர் கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது.

இயக்குனர் ஆர்கண்ணன் 'ஜெயம்கொண்டான்' முதல் சமீபத்தில் வெளியான 'காசேதான் கடவுளடா' உள்பட பல திரைப்படங்களை இயக்கி உள்ள நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம் 'காந்தாரி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் மெட்ரோ சிரிஷ், ஹன்சிகா உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மாயாஜால மற்றும் த்ரில் கதை அம்சமுள்ள இந்த படத்தில் தான் ஹன்சிகாவை இயக்குனர் அசிங்கமாகவும் அருவருப்பாகவும், அடையாளமே தெரியாத வகையில் காட்டி இருக்கிறார். எவ்வளவு அழகான ஹன்சிகாவை இப்படி அசிங்கமாக காட்டி இருக்கிறாரே என்று ரசிகர்கள் இந்த மேக்கிங் வீடியோவை பார்த்து தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் வரும் காட்சிகளை பார்க்கும்போது ஆர் கண்ணன் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான படத்தை இயக்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்து கணேஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’ உட்பட கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு ஒரு வெற்றிப் படம் இல்லாமல் இருக்கும் நிலையில் இந்த படமாவது அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement