• May 18 2025

அண்ணாமலை - விஜயா குடும்ப புகைப்படத்தில் மிஸ் ஆன 3 பேர்.. நல்லவேளை அந்த 2 பேர் இல்லை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருப்பதாக பலர் கருத்து கூறினாலும் சிலர் சீரியல் சில நாட்களாக மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது என்றும் கெட்டவர்களுக்கு மட்டுமே அடுத்தடுத்து நல்லது நடக்கிறது என்றும் நல்லவர்களுக்கு அடுத்தடுத்து கெட்டது நடக்கிறது என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ’சிறக்கடிக்க ஆசை’ சீரியல் இயக்குனருக்கு ரோகிணி கேரக்டர் ரொம்ப பிடிக்கும் போல் தெரிகிறது, அதனால் தான் அந்த கேரக்டருக்கு அடுத்தடுத்து நல்லது வரும்படி கதையை நகர்த்து கொண்டிருக்கிறார் என்றும் காமெடியாக விமர்சனம் செய்யப்படுகிறது.

அண்ணாமலை  - விஜயா குடும்பத்தில் மனோஜ், முத்து, ரவி மற்றும் அவர்களது மனைவிகளான ரோகிணி, மீனா மற்றும் ஸ்ருதி ஆகிய எட்டு கேரக்டர்களை வைத்து இந்த சீரியல் விறுவிறுப்பாக கொண்டு செல்வது உண்மையிலேயே ஒரு திறமை தான் என்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமும் உள்ளது.

இந்த நிலையில் இந்த சீரியலில் விஜயா கேரக்டரில் நடிக்கும் அனிலா ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் குடும்பத்தின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அண்ணாமலை - விஜயா உடன் மனோஜ், முத்து மற்றும் மீனா மட்டுமே உள்ளனர். ஸ்ருதி, ரவி மற்றும் ரோகிணி ஆகிய மூவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு கமெண்ட் பகுதி செய்துள்ள ரசிகர்கள் ’நல்ல வேலை இந்த புகைப்படத்தில் இரிடேட் செய்யும் ரோகினி மற்றும் ஸ்ருதி இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் ரவி இந்த புகைப்படத்தில் இருந்து இருக்கலாம் என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அனிலா ஸ்ரீகுமாரின் இந்த புகைப்படத்தில் ஒட்டுமொத்த குடும்ப புகைப்படம் இல்லாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement