• Jan 19 2025

விஜய்யுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. அதிரடி முடிவெடுத்த வயதே ஏறாத நடிகை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய்யுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று வயதை ஏறாத நடிகை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது அரசியல் கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சியில் சில திரை உலக பிரபலங்கள் இணைவார்கள் என்றும் குறிப்பாக இரண்டு முன்னணி நடிகைகள் இணைய வாய்ப்பிருப்பதாகவும் அவர்களில் ஒருவருக்கு கட்சியின் முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

விஜய்யுடன் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்த வயதே ஏறாதது அந்த நடிகை இதை கேள்விப்பட்டவுடன் கடுப்பானதாகவும் அரசியல் குறித்து தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் ஆனாலும் ஏன் தன்னுடைய பெயரை இணைத்து செய்திகளை பரப்புகிறார்கள் என்றும் விஜய் தரப்பு மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இனிமேல் விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் கடைசி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் கூட அதை ஏற்க போவதில்லை என்றும் அந்த நடிகை தனக்கே நெருக்கமானவர்களிடம் கூறியிருப்பதாக தெரிகிறது. தற்போது சில முக்கிய பிரபலங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகை அடுத்ததாக தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் கவனம் செலுத்த போவதாகவும் இனிமேல் விஜய்யுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறி இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் விஜய்யின் அரசியல் கட்சிக்கு பெரிய அளவில் திரையுலக பிரபலங்களிடமிருந்து ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரது கட்சி குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.  

Advertisement

Advertisement