• Jan 19 2025

மகாநதியில் கங்காவாக களமிறங்கும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை? யாரு தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி. இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி உள்ளார். தந்தையை இழந்த நான்கு சகோதரிகளையும், அவர்களின் உணர்வுப்பூர்வமான கதை அம்சத்துடனும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.

மகாநதி சீரியலில் லட்சுமி பிரியா, திவ்யா கணேஷ், காவியா, ஆதிரை ஆகியோர் சகோதரிகளாக நடித்து வருகின்றார்கள். இவரின் தந்தையாக சரவணனும் தாயாக சுஜாதா சிவகுமாரனும் நடித்துள்ளார்கள்.

மகாநதி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் பட்டைய கிளப்பி வருகின்றது. இந்த சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்த திவ்யா கணேஷ் திடீரென அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது கடந்த சில நாட்களாகவே அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதனால் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதன் காரணத்தினால் வேறு வழியின்றி திவ்யா கணேசுக்கு பதிலாக வேறு நடிகையை தெரிவு செய்துள்ளார்கள் மகாநதி  குழுவினர். இதனால் கங்கா கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.

இந்த நிலையில் மகாநதி சீரியலில் திவ்யா கணேஷுக்கு பதிலாக நடிகை தாரணி இனி கங்கா கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முதல் சன் டிவியில் ஒளிபரப்பான சிங்கப்பெண்ணே  சீரியலில் நடித்துள்ளார். தற்போது கங்காவாக மகாநதி சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரும் திவ்யா கணேசனை போல கங்காவாக ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement