• Jan 18 2025

சிம்புவின் பொறுமையை சோதித்த கமல்.. தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன்னு புலம்பல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும்எஸ்டிஆர் 48’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போதுதக்லைஃப்மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏதாவது ஒரு படத்தை முடித்த பின்னர் சிம்பு படத்தை தொடங்கலாம் என்றும் அப்போதுதான் பொருளாதார ரீதியில் பிரச்சனை இருக்காது என்றும் எண்ணுவதாக தெரிகிறது.

அதனால் தான் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இடம் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை பாருங்கள் என்று அவர் நாட்களை கடத்தி கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் சிம்பு நடித்தபத்து தலஎன்ற திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகி உள்ள நிலையில் இன்னும் அடுத்த படத்தை அவர் ஆரம்பிக்கவே இல்லை என்ற நிலையில் சிம்பு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இந்த ஒரு ஆண்டுக்குள் ஒரு சில சின்ன சின்ன நடிகர்கள் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சிம்பு போன்ற ஒரு மாஸ் நடிகர் இன்னும் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்லாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திடீரெனஎஸ்டிஆர் 48’ படம் டிராப்பாக வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு செய்தி போய்க் கொண்டிருப்பதால், கமலஹாசனிடம் தெரியாமல் மாட்டிக் கொண்டதாக சிம்பு தனது நெருக்கமான வட்டாரங்களிடம் புலம்பி வருவதாக தெரிகிறது. அதேபோல் தான் எச். வினோத்தையும் சிம்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் காக்க வைத்துவிட்டு அதன்பின் ஏமாற்றி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சிம்பு உடனடியாகஎஸ்டிஆர் 48’ படம் இல்லை என்றாலும் வேறு ஒரு படத்தில்  நடிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் இன்னும் ஆறு மாதத்தில் அவர் ஒரு படத்தை வெளியிட்டு ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement