• Jan 19 2025

மேலும் மேலும் அவமானப்படும் முத்து; மீனாவின் அம்மாவும் இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே! ரோகிணிக்கு ஷாக்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், மீனாவின் அப்பா நினைவு நாளுக்கு அழைக்க வந்த மீனா குடும்பத்தை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார் விஜயா. இறுதியில் அண்ணாமலை உள்ளே போகுமாறு விஜயாவை திட்டி அனுப்புகிறார்.

மேலும், தனக்கு மீனா வாழ்க்கை பற்றி நினைக்கத்தான் கவலையாய் இருக்கு என்று சொல்லி இறுதியாக வெளியேற, அங்கு முத்து வருகிறார். ஆனாலும் முத்து அவர்களுடன் ஒன்றும் பேசாமல் நேராக உள்ளே செல்கிறார். இதை பார்த்து மீனாவின் அம்மா கவலைப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

இதை அடுத்த வீட்டுக்கு வந்த முத்துவிடம்  நீ தான் அங்க போய் அவங்கட பையன் ஸ்தானத்துல இருந்து எல்லாம் செய்யணும் என்று சொல்ல, முத்து முதலில் மறுக்கிறார். ஆனாலும் அண்ணாமலை அட்வைஸ் பண்ண முத்து சரியென சொல்கிறார்.


மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியை பார்ப்பதற்காக ஸ்டூடியோவுக்கு செல்கிறார். அங்கு ஏன் நீங்க இரண்டு பேரும்  சைக்கிள்ல போனீங்க என கேட்க, ஸ்ருதி சிரித்து விட்டு நான் ரவிக்கு பனிஷ்மென்ட் கொடுத்தேன். அதனால் தான் அப்படி போனாங்க என்று சொல்ல, அப்ப வீட்ல ஸ்கூட்டி இருக்குது அத வந்து எடு என்று சொல்ல, நாங்க கார் வாங்க பிளான் பண்றோம் அப்படின்னு ஸ்ருதி சொல்கிறார்.

மேலும், ஸ்ருதியின் அம்மா ஃபாரின் டிக்கெட் ஒன்றை கொடுத்து நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க அப்படி என்று சொல்லுகிறார்.

மனோஜ் தனக்கு வேலை போன விஷயத்தை ரோகிணியிடம் சொல்ல, அவர் ஷாக் ஆகிறார். ஆனாலும் கண்டபடி அவரை திட்டுகிறார். ஒரு மாசம் கூட உன்னால் ஒழுங்கா வேலைல இருக்க முடியல என்று.

மறுபக்கம் மீனா வீட்டில் அவரது அப்பாவின் நினைவு நாளுக்கு எல்லாம் ரெடியாகிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்தவர்கள் முத்து இப்படி பண்ணிட்டாரே அப்படி என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒன்றும் பேச முடியாமல் மீனாவும் மீனாவின் குடும்பமும் நிற்கிறது.

அதைத் தொடர்ந்து முத்துவுக்காக காத்திருந்து இறுதியில் நேரமானதால் அவர்கள் சம்பிரதாயத்தை ஆரம்பிக்கிறார்கள். அந்த நேரத்தில் முத்து வர, அங்கும் நீங்க ஏன் இப்படி செய்திங்க  என அயலவர்கள் விசாரிக்கிறார்கள்.

அதற்கு முத்து ஒன்றும் பேசாமல் செல்ல, சத்யா அப்பாவுக்கு ஆரத்தி காட்டுவதற்கு கையை தூக்க முனைய, முடியாமல் கீழே சுடத்தை தட்டி விழுத்தி விடுகிறார்.

இதை பார்த்து மீனாவின் அம்மா அழுகுறார். உங்க பையனுக்கு சூடம் கூட காட்ட முடியல. அப்படி உடைச்சி வச்சு இருக்காங்க. முத்துவ என் மகன் போலத்தானே பார்த்தேன். ஏன் இப்படி செய்தார் என பேசிக் கொண்டு இருக்க,  முத்து வெளியே நின்று எல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் அவர் வாசலில் முகத்தை காட்ட எல்லாரும் ஷாக் ஆகிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement