தென்னிந்திய இசை உலகில் தற்போது வெற்றிக் கொடியை நாட்டி வரும் இசையமைப்பாளராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், சமீபத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இசை மட்டுமல்ல, ஆன்மிக நம்பிக்கையும் கொண்ட அனிருத், தனது சமீபத்திய வெற்றிப்படங்களான "கூலி" மற்றும் "மதராஸி" ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பெருமாளை தரிசித்து, நன்றியுடன் பிரார்த்தனை செய்துள்ளார்.
2025 செப்டம்பர் மாதம் தொடர்ந்து பல பத்திரிகையாளர் சந்திப்புகள், இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் புதிய படங்களுக்கான பணிகள் என பிஸியாக இருந்து வந்த அனிருத், தனது மனதளவிலான நம்பிக்கையின் வெளிப்பாடாக திருப்பதி கோயிலுக்குச் சென்று அபிஷேகத்தில் கலந்துகொண்டார்.
இன்று அதிகாலை, கோயிலில் நடைபெற்ற அபிஷேக சேவையில் கலந்து கொண்ட அனிருத், பெருமாளின் திருவுருவத்தை தரிசித்து, அமைதியாக பிரார்த்தனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பூஜை முடிந்த பிறகு, திருப்பதி கோயில் வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது பணிவுடன் பேசிய அனிருத்,
“கூலி படத்திற்கும், அதற்குப் பின் வந்த மதராஸி படத்திற்கும், ரசிகர்கள் அளித்த அன்பு மிகப் பெரிய வெற்றியாக அமைந்திருக்கின்றது. இதில் என் இசையைக் கொண்டாடிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. அந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.” என்றார்.
Listen News!