• Jan 19 2025

தந்தை மறைவில் இருந்து மீண்ட சண்முக பாண்டியன்! மீண்டும் களத்தில் இறங்கிய போட்டோஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு உயிரிழந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின், மகனான சண்முக பாண்டியன் தற்போது தனது மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி  உள்ளது.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ஏற்கனவே ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ள நிலையில்,   'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வந்தார்.

எனினும், கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், விஜயகாந்தின் மறைவு காரணமாக படப் பிடிப்பு ஒத்திவைக்கப்ட்டு இருந்தது.


இந்த நிலையில், தனது தந்தையின் மறைவை அடுத்து சோகத்தில் இருந்த சண்முக பாண்டியன், தற்போது தனது மனதை  தேற்றிக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.


தற்போது இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதே வேளை, படைத்தலைவன் படம் மட்டுமின்றி குற்றப்பரம்பரை என்ற வெப் தொடரிலும் சண்முக பாண்டியன் நடித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement