• Apr 15 2026

தியேட்டரில் ஓங்கி ஒலிக்கிறதா சைரன் சப்தம்? 2 நாளில் எகிறிய பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் தான் சைரன். ஹோம் மூவி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில், ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, ஜோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்

தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரம் ஸ்கிரீன்களுக்கும் அதிகமாக ரிலீஸான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும்  கிட்டத்தட்ட 1:40 கோடியாம்.


இது அகிலன், இறைவன் படங்களின் வசூலை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சைரன் படத்தின் இரண்டாம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி சைரன் இரண்டாவது நாள் வசூல் 1.73 கோடி என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் 3.13 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது சைரன்.

மேலும், முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிகம் கலெக்‌ஷன் செய்துள்ளது சைரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement