• May 02 2024

தனுஷின் ‘D50’ படத்தின் மாஸான அறிவிப்பு! சந்தோசத்தில் எகிறி குதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான ‘வாத்தி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  ஆனாலும் இறுதியாக வெளியான கேப்டன் மில்லர் ஓரளவு தான் வரவேற்பை பெற்றது.

தனுஷின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் மரியான்.

இதனைத் தொடர்ந்து, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார். என சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அபர்ணா பால முரளி, நித்யா மேனன், அனிகா சுரேந்திரன், சந்திப் கிஷன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இந்நிலையில், D50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  

மேலும், D50 படத்தை தொடர்ந்து தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

Advertisement

Advertisement

Advertisement