• Feb 01 2026

சபரிக்காக மீண்டும் ஒன்றிணைந்த அன்பு கேங் ரீ-யூனியன்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடும் போட்டிக்கு மத்தியில் சபரி முதல் ரன்னராகவும், விக்கல்ஸ் விக்ரம் இரண்டாவது ரன்னராகவும் இடம் பிடித்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 9-ல், இருபதுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் ஏற்கனவே ரசிகர்களை கொண்ட பிரபலங்களாக இருந்தனர். தொடக்கம் முதல் முடிவு வரை இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாகவும், திருப்பங்களுடன் கூடியதாகவும் ரசிகர்களை கட்டிப்போட்டது.

போட்டியின் போக்கில் விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் ரெட் கார்டு பெற்று வெளியேறினர். அதேபோல் கானா பாலா பணப்பெட்டியுடன் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இறுதிக்கட்டத்தில் நடந்த பரபரப்பான போட்டியின் முடிவில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரீ-யூனியன் பார்ட்டி ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகின.

இந்நிலையில், சபரிநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றுகூடி சிறப்பான கொண்டாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.. சபரிக்கு தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சப்ரைஸ் கேக் கட்டிங் நிகழ்வின் வீடியோவும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த மகிழ்ச்சியான தருணங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சபரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட நட்பு, போட்டி முடிந்த பின்பும் தொடர்வது ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement