• Apr 14 2026

மனோரமா கணவர் இறந்த அன்று கூட வலியோட நடிக்கவந்தாங்க... உண்மையை உடைத்த பிரபலம்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடனம், காமெடி, டிராமா என அனைத்தும் கலந்த " சின்ன தம்பி" திரைப்படம் வெளியான காலத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சில காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை அதிர்ச்சிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் பி.வாசு சமீபத்திய நேர்காணலில் " சின்ன தம்பி" படப்பிடிப்பின் போது மனோரமாவிற்கு நிகழ்ந்த துயரமான சம்பவம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். 


அதாவது, " சின்ன தம்பி படத்தில ஆச்சி மனோரமா விதவை, அவங்கள தூண்ல கட்டி, பொட்டு பூ வைச்சு மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி சீன் எடுத்திட்டு இருக்கும் போது... அவங்க கூட சுகுணானு ஒருத்தர் இருப்பாங்க. அவங்க என்கிட்ட வந்து ,'தம்பி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.?

ஆச்சி மனோரமா கணவர் இறந்திட்டாங்க' என்று சொன்னார். அதைக் கேட்ட உடனே ஷாக் ஆகிடுச்சு. அவங்க கணவரை பிரிஞ்சு ரொம்ப வருஷம் ஆச்சு. இருந்தாலும் கூட அப்படிப்பட்ட சூழ்நிலையில அவங்க நடிக்க வந்தாங்க. இது சினிமாவில தான் நடக்கும். ஆனா, உண்மையை சொன்னால் நம்பமாட்டாங்க." என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement