• Mar 13 2026

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்... சோகத்தில் திரையுலகம்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான நடிப்பு, இயல்பான நகைச்சுவை, மற்றும் பல்துறை திறமையால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த நடிகை கேத்தரின் ஓ’ஹாரா (Catherine O’Hara) காலமானார். அவருக்கு வயது 71. லாஸ் அஞ்சலெஸில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இந்த செய்தி ஹாலிவுட் திரையுலகினரிடமும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல தலைமுறைகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஒருவரை திரையுலகம் இழந்துள்ளது.

கேத்தரின் ஓ’ஹாரா, சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தவர். இவர், " Beetlejuice" , " Home Alone" , "Best In Show" மற்றும் " A  Mighty Wind " போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். 

இந்நிலையில், அவரது மறைவுச் செய்தி வெளியான உடனே ஹாலிவுட் திரையுலகினர், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement