தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு நாயகிகளாக திகழ்ந்த சமந்தா, தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகிய மூன்று முன்னணி நடிகைகள் சமீபத்தில் ஒரு நிகழ்வில் ஒன்றாக சந்தித்துள்ளனர். அந்த நிகழ்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த மூன்று நடிகைகளும் நடித்த பல திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரிட் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. சமந்தா நடித்த ‘நான் ஈ’, தமன்னா நடித்த ‘பாகுபலி’, காஜல் அகர்வால் நடித்த ‘மாவீரன்’ போன்ற படங்கள் காலத்தால் அழியாத வெற்றிப் படங்களாக இன்றும் பேசப்படுகின்றன. ஒரு காலத்தில் இவர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது தியேட்டர்கள் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.
திரையுலக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தனித்தனி பாதைகளை தேர்வு செய்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் இவர்களுக்கான இடம் எப்போதும் தனித்துவமாகவே இருந்து வருகிறது. நடிகை சமந்தா, உடல்நலக் காரணங்களால் சில காலம் சினிமாவிலிருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்தினார். அதன் பின்னர் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் திரையுலகில் வலம் வரத் தொடங்கியுள்ளார்.

அதேபோல் நடிகை காஜல் அகர்வால், தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் ஒரு குழந்தையின் தாயாகவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியபடி, தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
மூவரிலும் நடிகை தமன்னா மட்டும் இடைவிடாது தனது திரைப் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் தமன்னா, திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பாடல்களிலும் தோன்றி ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், அவர்களுடன் பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர் உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்து கொண்ட காட்சிகளும் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.
Listen News!