• Feb 01 2026

காஜல் அகர்வாலா இது.? என்றும் மாறாத அழகு.! இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட லேட்டஸ்ட் ஸ்டீல்கள்

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். அழகும் திறமையும் ஒருங்கிணைந்த நடிகையாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த காஜல், கோலிவுட், டோலிவுட் என இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்துள்ளார்.


தமிழ் சினிமாவில், தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார். 

2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிட்சலுவை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், அதன் பின்னர் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்க தொடங்கினார். திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும், அதனை அவர் ஒருபோதும் பின்னடைவு என்று கருதவில்லை என்பதையே அவரது சமீபத்திய பேட்டிகளும் செயல்பாடுகளும் காட்டுகின்றன.


திருமணத்திற்கு பிறகு சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்ட காஜல், தாய்மையை அனுபவித்தார். 2022 ஆம் ஆண்டு தனது மகனை பெற்றெடுத்தார். அதன் பின்னர் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில், அவர் தனது கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் மிகவும் அழகாகவும் இயல்பாகவும் போஸ் கொடுத்துள்ளார். லீக்கான போட்டோஸ் இதோ.!


Advertisement

Advertisement