• Feb 01 2026

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான தகவல்!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘பராசக்தி’  படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘பராசக்தி’ திரைப்படம் வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக இந்தி எதிர்ப்பு தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாகக் கொண்டு படம் பேச முயன்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

அதே நேரத்தில், திரைக்கதை இன்னும் அழுத்தமாகவும் வலுவாகவும் இருந்திருக்கலாம்  என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்த படம் வசூல் ரீதியாக,  ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 


ஆனால், இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.200 கோடி இருக்கும் என கூறப்படுவதால், வசூல் விவகாரம் குறித்தும் திரையுலக வட்டாரங்களில் விவாதம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஜீ5 (ZEE5)-இல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் திரையரங்குகளில் படம் பார்க்க முடியாத ரசிகர்கள், ஓடிடியில் படத்தை காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அல்லது ஜீ5 தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement