• Feb 01 2026

"நந்தன் 2" உருவாகவுள்ளதா.? இயக்குநர் வெளியிட்ட பதிவால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பு மற்றும் கதை தேர்வுகளால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சசிகுமார், இயக்குநராகவும், நடிகராகவும் பல்வேறு படங்களில் சாதனைகளை செய்துள்ளார். அவர் இயக்குநராக அறிமுகமான “சுப்ரமணியபுரம்” திரைப்படம், விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் நடிகராக பல வெற்றி படங்களை வெளிப்படுத்திய சசிகுமார், திரையுலகில் தனித்துவமான இடத்தை நிலைநிறுத்தினார்.


இந்நிலையில், சசிகுமார் நடிப்பில், இரா சரவணன் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று வெளியான “நந்தன்” திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் சசிகுமாருடன் சேர்ந்து சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்திருந்தனர்.

“நந்தன்” படத்தின் வெற்றியைப் பார்த்து, இரா சரவணன் “நந்தன் 2” உருவாக்கத் தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். சமீபத்திய சமூக வலைதளப்பதிவில் அவர், “முழுக்க முழுக்க ‘நந்தன்’ படம் குறித்த பேச்சுதான்… ‘நந்தன் 2’ எடுக்க மூவருமே தயார்… விரைவில் நற்செய்தி.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. 

Advertisement

Advertisement