• Feb 01 2026

ரஜினி குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு அடுத்த என்ட்ரி... - மகன் வேத் குறித்து சௌந்தர்யா

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘வித் லவ்’. அனஸ்வரா ராஜன் மற்றும் அபிஷன் ஜீவிந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், இளம் தலைமுறையினரைக் கவரும் காதல் கதையாக உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் ஊடகங்கள் எனப் பலர் கலந்து கொண்ட இந்த விழா, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.


விழாவின் போது மேடையில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘வித் லவ்’ திரைப்படம் குறித்தும், புதிய நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் மனம் திறந்து பேசினார். இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாகவும், புதிய கதைகளையும் புதிய முகங்களையும் தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த், “என் மகன் வேத், வருங்காலத்தில் நிச்சயமாக சினிமாவுக்கு வருவான்.” என்று கூறினார். இந்த கருத்து விழாவில் இருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. 

Advertisement

Advertisement