தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று ‘ஜனநாயகன்’. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள இந்த திரைப்படம், அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ளதாக கூறப்பட்டதால், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இந்த படம் முதலில் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப படத்தின் புரமோஷன் பணிகளும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சகட்டத்தை எட்டியிருந்தன. ஆனால், வெளியீட்டிற்கு முன்பாகவே சென்சார் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டதால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.

‘ஜனநாயகன்’ திரைப்படம் அரசியல் சார்ந்த கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சென்சார் போர்டில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால், படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் படம் வெளியாகலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், Book My Show தளத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த தளத்தில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த தகவலை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், படம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாக டிசம்பர் 26 என குறிப்பிடப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த Book My Show அப்டேட்டை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், அதற்கு ஒரு அரசியல் கலந்த கமெண்ட்டையும் சேர்த்துள்ளார். அவர் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில், “எதே Dec 26-ஆ... அந்த டைம்ல தளபதி ஆட்சிக்கு வந்து 6 மாசமே முடிந்திருக்கும்.” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Listen News!